சரவணன் – என்னுடைய இயற் பெயர், புனைபெயர் மற்றும் துணை பெயர் எல்லாம் இதுதான். பிழைப்புக்காக பொறியியல் முடித்து விட்டு ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.
என்னுடைய பொழுதுபோக்கு வேலை செய்வது!!! (அட ஆமாங்க சரியாத்தான் படிக்கறீங்க) மற்றபடி வேலையாக செய்வது புத்தகம் படிப்பது, வலை பூக்களில் படிப்பது, இசை கேட்பது இன்ன பிற…
புத்தகம் படிப்பவர்களுக்கு என்று சில நோய்கள் இருக்கின்றன, படித்ததை மற்றவரிடம் வெகு சுவாரசியமாக சொல்வது அவர் கேட்கிறாரா இல்லையா என்பது பற்றி கவலை இல்லை. அதேபோல் எழுத முயற்சி செய்வது. எனக்கு இரண்டாவது நோய்.
நகைச்சுவை ததும்ப பேசுவது என் குணம், அது அப்படியே எழுத்திலும் பிரதிபலிக்கும்.